Press enter to see results or esc to cancel.

கேரளாவில் நடிகர் சூர்யாவுக்கு சென்டமேளத்துடன் வரவேற்பு

சூர்யா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் வருகிற 15–ந்தேதி ரிலீசாகிறது. இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.



இதற்கான பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சூர்யா பங்கேற்றார்.

கேரளாவிலும் ‘அஞ்சான்’ படம் வெளியாவதை தொடர்ந்து சூர்யா. படத்தின் டைரக்டர் லிங்குசாமி, தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கொச்சி சென்றனர். அங்கு தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், ரசிகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது சூர்யாவுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி சென்டமேளத்துடன் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். இளம்பெண் சூர்யாவின் நெற்றியில் திலகமிட்டு வரவேற்றார்.