Press enter to see results or esc to cancel.

கோச்சடையான் பற்றி வதந்தி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி ரிலீஸ் ஆகிறது என்று வதந்தி பரவியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான்.

இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார்.

கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் கோச்சடையான் வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் காட்டுத் தீ போன்று பரவியது.

இது குறித்து கோச்சடையான் குழு, அப்படியெல்லாம் இல்லை. இன்னும் ரிலீஸ் பற்றி பேச்சே எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுத ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளது.




Welcom MP3 Songs, Welcom Videos Songs