Press enter to see results or esc to cancel.

விஸ்வரூபம் விவகாரம் உலக நாயகன் புகார்



விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பக்கூடாது என நடிகர் கமலஹாசனுக்கு விடுத்த மிரட்டலை அடுத்து தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் கமலஹாசன் நேரில் புகார் அளித்துள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படம் வரும் 10ம் திகதி, டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பிவிட்டு 11ம் திகதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பக்கூடாது என்றும், மீறினால் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பு செய்யப்படும்போது மின்சாரத்தை துண்டித்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், ஒளிபரப்பின்போது மின்சாரத்தை துண்டித்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து வருவதாகவும், மிரட்டல் விடுத்தவர்களின் முழு விவரங்களும் அந்த மனுவில் தெரிவிக்கப்படுள்ளதாகவும் கமலஹாசன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், திட்டமிட்டபடி விஸ்வரூபம் திரைப்படம் 10ம் திகதி டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பபடும்.

மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படமாட்டேன். மேலும் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது திரையரங்குகள் மற்றும் படத்துக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இதுகுறித்து தலைமைச் செயலாளரை சந்தித்தும் புகார் மனு அளிக்க உள்ளதாக கூறினார்.



Welcom MP3 Songs, Welcom Videos Songs