Press enter to see results or esc to cancel.

கோடி ரூபாய் கேட்ட ஸ்ருதி ஹாசன்



தெலுங்கில் ராம் சரணுடன் நடிப்பதற்கு நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ.1 கோடி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ஸ்ருதி நடித்த கப்பர் சிங் படம் சூப்பர் ஹிட்டானதையடுத்து அவருக்கு மார்கெட் அதிகமானது.

இதையடுத்தே தெலுங்கு உட்பட தமிழ், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் நடிக்க ஸ்ருதியை இயக்குனர் ஒருவர் அணுக, கோடி ரூபாய் கேட்டுள்ளார்.

இருப்பினும் சில மாதங்களுக்கு பின்னர் ரூ.60 லட்சத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து ஸ்ருதி, திகதிகள் பிரச்னையால் ஒப்புக்கொள்ள தாமதமாகிவிட்டதென்றும் மற்றபடி கோடி ரூபாய் கேட்கவில்லையெனவும் கூறியுள்ளார்.

மேலும் ராம் சரணுடன் நல்ல கதாப்பாத்திரத்தில் நடிப்பதை தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


Welcom MP3 Songs, Welcom Videos Songs

APA Times Your Times

இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...