Press enter to see results or esc to cancel.

கண்ணா லட்டு தின்ன ஆசையா திருட்டுக்கதை: பாக்யராஜ் புகார்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை திருடப்பட்டிருக்கிறது என இயக்குனர் கே. பாக்யராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இன்று போய் நாளை வா படத்தின் கதை சாயலில் எடுக்கப்பட்டிருப்பதாக பாக்யராஜ் குற்றம் சாட்டியுள்ளார்

மேலும் இதன் மூலம் தனக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டமேற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தானம், ராமநாராயணன் தயாரிப்பில் உருவாகும் இக்கதையை ஏற்கனவே இவர்கள் பாக்யராஜிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் பாக்யராஜ் தர மறுக்கவே, இந்த கதை திருட்டு நடந்துள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமா இயக்குனர்கள் மெக்சிகன், ஈரானிய படங்களிலிருந்து கதை திருடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

மேலும் கதை திருட்டு சம்பவங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருவது இயக்குனர்களிடையே கற்பனை திறன் குறைந்து வருகின்றமையை காட்டுகின்றது.


Welcom MP3 Songs, Welcom Videos Songs