Press enter to see results or esc to cancel.

சிம்புவின் காதலர் தின பரிசு

சிம்புவுக்கு தற்போது காதலி இல்லாவிட்டாலும் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு கொடுக்க நினைக்கிறாராம்.

தற்போது சிம்பு, வாலு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தானமும் விடிவி கணேசும் இணைந்து நடிக்கிறார்கள்.

தமன் இசையில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் வாலு படத்தை நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரிக்கிறார்.

இப்படத்தின் இசை பெப்ரவரி 3ம் திகதி வெளியாக முழு படமும் காதலர் தின பரிசாக பெப்ரவரி 14ம் திகதியில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனராம்.