Press enter to see results or esc to cancel.

மைனா நாயகன் விதார்த் நடிக்கும் நாகேஷ் (வீடியோ)

தமிழ் திரையுலகில் முக்கியமான நகைச்சுவை நடிகராக விளங்கியவர் மறைந்த நடிகர் நாகேஷ்.

இவர் நடித்த காதலிக்க நேரமில்லை படத்தில் ஓஹோ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்குவதாக கூறி நகைச்சுவை செய்திருப்பார்.

இந்த காட்சி இன்று வரை மிகப்பிரபலம். இந்நிலையில் ஓஹோ பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டு நாகேஷ் என்ற பெயரில் புதிய படத்தை தொடங்கியுள்ளனர்.

வாழ்வை முடித்து கொள்ள துடிக்கும் நாகேஷ் வாழ்வில் 6 பேர் குறுக்கிடுகிறார்கள்.

அதன் பின் அவன் வாழ்க்கை எப்படி சுவாரஸ்யமாக மாறுகிறது என்பதே படத்தின் கதை.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் யுவராஜ் தயாளன்.

இத்திரைப்படத்தில் விதார்த் "நாகேஷ்" என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் தம்பி ராமையா, ஜி.எம்.குமார், எம்.எஸ் பாஸ்கர், மயில் சாமி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.