Press enter to see results or esc to cancel.

உளவுத்துறை இயக்குனரின் அடுத்த படைப்பு "தலைவன்"


கொலிவுட்டில் பு‌ளு ஒசன்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ பி‌.சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ தயா‌ரி‌க்கும் படம் தலைவன்.

இப்படத்தில் அறிமுக நடிகர் பாஸ் நா‌யகனாகவும், குஜரா‌த்‌ அழகி‌ நி‌கி‌ஷா‌ படேல்‌ நா‌யகி‌யா‌கவும் நடிக்கின்றனர்.

இவர்‌களுடன்‌ சந்‌தா‌னம்‌, கோ‌வை‌ சரளா‌, மோ‌னி‌கா‌, ‌சுமன்‌, ஜெ‌யப்‌பி‌ரகா‌ஷ்‌, கோ‌ட்‌டா‌ சீ‌னி‌வா‌ச ரா‌வ்‌, வி‌ன்‌செ‌ன்‌ட்‌ அசோ‌கன்‌, அபி‌ஷே‌க்‌, சுமன்‌ ஷெ‌ட்‌டி‌, மனோ‌பா‌லா‌ உட்‌பட ஏரா‌ளமா‌னோ‌ர்‌ நடி‌த்‌து வருகி‌ன்‌றனர்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ தொடங்‌கி‌ ஹை‌தரா‌பா‌த்‌, கோ‌வா‌, டா‌ர்‌ஜி‌லி‌ங்‌, சி‌க்‌கி‌ம்‌, கொ‌ல்‌கத்‌தா‌ போ‌ன்‌ற ஊர்‌களி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது.

பெ‌ரும்‌ பொ‌ருட்‌ செ‌லவி‌ல்‌ மி‌க பி‌ரமா‌ண்‌டமா‌க உருவா‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை‌ உளவுத்துறை படத்தை இயக்கிய ரமே‌ஷ்‌ செ‌ல்‌வன், தி‌ரை‌க்‌கதை‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌ர்‌.

முகமது ஜா‌பர்‌ கதை‌ - வசனம்‌ எழுத, ‌எஸ்‌.கே‌.பூ‌பதி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. ஆண்‌டனி‌ படத்‌தொ‌குப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌.

வி‌த்‌யா‌சா‌கர்‌ இசை‌யமை‌க்‌க பா‌டல்‌களை‌ அறி‌வு‌மதி‌, நா‌. முத்‌துக்‌குமா‌ர், யு‌கபா‌ரதி‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌.

படம்‌ குறித்து தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌ செ‌ல்‌வன்‌ கூறுகையில், குழந்‌தை‌கள்‌ முதல்‌ பெ‌ரி‌யவர்‌கள்‌ வரை‌ குடும்‌பத்‌துடன்‌ பா‌ர்‌த்‌து ரசி‌க்‌க கூடி‌ய‌ வகை‌யி‌ல்‌, ஹை‌ ஓல்‌டே‌ஜ்‌ ஆக்‌ஷன்‌ படமா‌க இந்‌தப்‌ படம்‌ இருக்‌கும்‌.

ஒரு பு‌துமுக நடி‌கரி‌ன்‌ படம்‌ போ‌ல இல்‌லா‌மல்‌, ஏற்‌கனவே‌ பா‌ர்‌த்‌து ரசி‌த்‌த ஒரு முன்‌னணி‌ கதா‌நா‌யகனின்‌ படம்‌ போ‌ல படு வி‌றுவி‌றுப்‌பா‌க படம்‌ இருக்‌கும் எனவும் கூறியுள்ளார்.