Press enter to see results or esc to cancel.

கமலுக்கு நான் தியேட்டர் தருகிறேன்: தாசரி நாராயணராவ்

கமல் தான் நிஜமான உலகநாயகன், அவர் படத்துக்கு நான் தியேட்டர் தருகிறேன் என கூறியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முக்கியபுள்ளி தாசரி நாராயணராவ்.

ஆந்திராவில் தாசரி நாராயணராவின் கட்டுப்பாட்டில் ஏராளமான தியேட்டர்கள் உள்ளன.

சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பெரிய படங்கள் வெளியாவதால் விஸ்வரூபத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடப் போவதாக முதலில் கமல் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது தாசரி நாராயணராவ் தந்த தைரியத்தில், தமிழில் வெளியாகும் போதே ஆந்திராவிலும் விஸ்வரூபத்தை வெளியிடப் போகிறாராம் கமல்.

விஸ்வரூபம் குறித்து தாசரி நாராயணராவ் கூறுகையில், டிடிஎச்சில் முன்கூட்டியே படத்தை வெளியிடும் கமல் முடிவை நான் வரவேற்கிறேன்.

அவருக்கு ஆதரவாக தியேட்டர்களைத் தரவும் முடிவு செய்துள்ளேன். கமல் நிஜமான உலக நாயகன், அவர் முடிவு திரையுலகுக்கு பலன் தரும் என்றார்.


Welcom MP3 Songs, Welcom Videos Songs