Press enter to see results or esc to cancel.

அப்பாவுடன் இணைகிறேனா? ஸ்ருதி விளக்கம்

ஸ்ருதிஹாசன், அப்பா கமலுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியானது.

விரைவில் கமல்ஹாஸனுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் தொடங்கவிருக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாஸன் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாயின.

கமல்ஹாஸனும், ஸ்ருதி ஹாஸனும் சேர்ந்து நடிக்க விருப்பமுள்ளதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அடுத்து உருவாகும் கமல் படத்தில் ஸ்ருதி நடிப்பார் என்று யூகங்கள் கிளம்பின.

இதற்கு விளக்கம் அளித்த ஸ்ருதி, இப்போதைக்கு அப்பாவுடன் சேர்ந்து படம் பண்ணும் திட்டம் இல்லை. ஆனால் அப்படியொரு எண்ணம் உள்ளது. நடக்கும்போது நானே சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் இப்போதைக்கு தெலுங்கில் யாதவா, பாலுபு ஆகிய இரு படங்களிலும், இந்தியில் பிரபு தேவா இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.


Welcom MP3 Songs, Welcom Videos Songs