Press enter to see results or esc to cancel.

ஆண்களை விட பெண் இயக்குனர்கள் அதிகம் சிந்திப்பவர்கள்: கௌதம் மேனன்

ராஜேஷ்கண்ணா தயாரிப்பில் 'பெருமான்' படத்தில் எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் ஆகப் பணியாற்றிய சின்னத்திரை நடிகை பிருந்தா தாஸ் 'ஹாய் டா' என்ற இளமை கலாட்டா படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் சினிமாஸில் நடந்தது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் திரையிடப்பட்டது.

உதய்- பாவனா, அஸ்வின் -ஜாக்குலின், பிரதீஷ் -வருதி ஆகிய மூன்று இளம்ஜோடிகளை வைத்து கலகலப்பாக எடுக்கப்பட்ட ஹாய் டா படத்தின் மூலம் விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

படத்தின் ஐந்து பாடல்களையும் சாருகேஷ் சேகர் எழுதியுள்ளார்.

விழாவில் பேசிய இயக்குனர் கெளதம் வாசுதேவ்மேனன், அதிகமாகப் பெண் இயக்குனர்கள் வரவேண்டும்.

என் குழுவில் எப்பொழுதுமே நான்கு அல்லது ஐந்து பெண் உதவி இயக்குனர்கள் இருப்பார்கள்.

அவர்கள் ஆண்களை விட கொஞ்சம் அதிகமாகவே அழகாகச் சிந்திக்கக் கூடியவர்கள்.

பிருந்தா தாஸ், நடிப்பு, டப்பிங் மற்றும் நடனம் என்று பல துறைகளில் புகழ்பெற்றவர்.

ஹாய் டா படத்தின் இயக்குனராக அறிமுகமாகியிருக்கற பிருந்தா வெற்றி பெறுவார் என்று வாழ்த்தியுள்ளார்.

ஹாய் டா பட இசை குறுந்தகடை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட, இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

படத்தின் டிரைலரை கெளதம் மேனன் வெளியிட இயக்குனர்கள் பாலாஜி மோகன், பாலாஜி தரணீதரன் இருவரும் பெற்றுக்கொண்டார்கள் .


Welcom MP3 Songs, Welcom Videos Songs