Press enter to see results or esc to cancel.

புத்தாண்டு கொண்டாடிய கனவு கன்னிகள்

திரையுலகின் கனவுகன்னிகளான சமந்தா,நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை பற்றி பேசியுள்ளனர்.

 நயன்தாரா துபாயில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் உள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்ற அவர், புத்தாண்டையும் கொண்டாடினார்.

இதுகுறித்து நயன்தாரா, புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறேன்.

 கடந்த 2012-ம் ஆண்டு நன்றாக அமைந்தது.

 நல்ல படங்களில் நடித்தேன்.

 ஆந்திர அரசின் நந்தி விருதும் கிடைத்தது. இந்த வருடமும் சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என்றார்.

 நடிகை காஜல் அகர்வால் மும்பையில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார்.

அவர் கூறும்போது, ஓய்வு இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றுகிறேன்.

 புத்தாண்டில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வந்து விட்டேன்.

 தங்கை நிஷா அகர்வாலுடன் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுகிறேன் என்றார்.

 நடிகை தமன்னாவும் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடினார்.

 கடந்த வருடம் மகிழ்ச்சியாக கழிந்தது.

இந்த ஆண்டும் அதுபோல் அமையும் என்றார்.

 நடிகை சமந்தா குடும்பத்தினருடன் வீட்டில் புத்தாண்டு கொண்டாடினார்.

 கடந்த ஆண்டு ஆறு படங்களில் நடித்தேன்.

 புத்தாண்டிலும் பிசியான நடிகையாக இருப்பேன் என்று அவர் கூறினார்.

 Welcom MP3 Songs, Welcom Videos Songs