Press enter to see results or esc to cancel.

பாரிஸ் திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9

வித்தியாசமான, இயல்பான கதைக்களத்துடன் வெளியான வழக்கு எண் 18/9 நல்ல வரவேற்பை பெற்றது.

இதையொட்டி சர்வதேச திரைப்பட விழாக்களிலும் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது.


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 16ம் திகதியிலிருந்து, 19ம் திகதி வரை தெற்காசிய திரைப்பட விழா நடக்கவுள்ளது.


இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.


இந்தியா சார்பில் திரையிடப்படும் படங்களில் தமிழில், வழக்கு எண்18/9 மற்றும் பீட்சா திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.


இந்திய திரையுலகம் என்பது பாலிவுட் படங்கள் மட்டுமல்ல, தமிழ் படங்களும் தான்.


தமிழ் படங்களும் பாலிவுட் படத்திற்கு நிகரானது தான் என்பதை இந்த படங்கள் உணர்த்துகின்றன என்கிறது கொலிவுட் பட வட்டாரம்.



Welcom MP3 Songs, Welcom Videos Songs