Press enter to see results or esc to cancel.

'யாருடா மகேஷ்' நடிகருடன் இணையும் நிஷா அகர்வால்

கொலிவுட்டில் இஷ்டம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் நிஷா அகர்வால்.

காஜல் அகர்வாலின் சகோதரியான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

கொலிவுட்டில் 'மறந்தேன் மன்னித்தேன்', 'யாருடா மகேஷ்' படங்களில் நடித்த சந்தீப் கிஷன், நிஷா உடன் இணைகிறார்.

அறிமுக இயக்குனர் போஸ் இயக்கும் இப்படத்தில் சம்பத் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

'மாலை பொழுதின் மயக்கத்திலே' அச்சு இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

நாயகன் சந்தீப், மறந்தேன் மன்னித்தேன், யாருடா மகேஷ் படங்களின் ரிசல்டை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.