Press enter to see results or esc to cancel.

கன்னட 'சுந்தரபாண்டியனில்' மேக்னா ராஜ்

கொலிவுட்டிலும் மலையாளத்திலும் நடிக்க ஆர்வம் காட்டும் மேக்னா ராஜ், கன்னடத்தில் சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் குருதேஷ் பாண்டே இயக்கும் கன்னட ரீமேக் 'சுந்தரபாண்டியனில்' நடிகர் யாஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.

இது குறித்து மேக்னா கூறுகையில், சசிகுமார் சார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தை பார்த்து அசந்து போனேன்.

அதில் லட்சுமி மேனன் நடித்த நாயகி கதாபாத்திரத்தில் நான் நடிப்பதை நினைத்து பெருமையடைகிறேன் என்றார்.

இவர், முதன்முறையாக கன்னட நடிகர் யாஷ் உடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழில் 'நிமிர்ந்து நில்', 'கள்ள சிரிப்பழகா' படங்கள் தனக்கு நல்ல பேரை வாங்கித்தரும் என்று மேக்னா உறுதியாக நம்புகிறார்.

APA Times Your Times

இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...