Press enter to see results or esc to cancel.

சிவா, சந்தானத்துடன் இணையும் பவர் ஸ்டார்

சிவா, சந்தானம் கூட்டணியில் உருவாகி வரும் ‘யா யா’ என்ற படத்தில் நடிக்க ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து பவர் ஸ்டாரின் பக்கம் தமிழ் திரையுலகம் திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் ‘யா யா’ படத்தை புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்க, விஜய் எபினேசர் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

பீட்சா படத்திற்கு பின் இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மேலும், மனோபாலா, இளவரசு, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

பவர் ஸ்டார் இந்த கூட்டணியில் சேர்ந்திருப்பதால் படத்தில் 100 சதவீதம் கொமெடிக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.