Press enter to see results or esc to cancel.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முத்தக் காட்சி

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான கடல் படத்தில் கவுதம், துளசி அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்தில் அதிரடியான முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிப் லாக் எனப்படும் ஆங்கில முத்தக் காட்சி இதுவாகும், படத்திற்கான தெலுங்கு டிரைய்லரில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆனால் படம் தொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இந்த காட்சி இடம்பெறவில்லை.

இதற்கு ராதா முதலில் தயங்கினார், ஆனால் துளசி தைரியமாக நடித்தாராம்.

நாயகன் கவுதம் பல டேக்குகள் வாங்கி நடித்தார். 10 விநாடி முத்தக் காட்சி எடுக்க நான்கு மணி நேரம் ஆனது.

துளசி ரொம்ப தயங்கியதால் முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் தவிர மற்றவர்கள் வெளியே அனுப்பப்பட்டு படம் பிடிக்கப்பட்டது என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கும், ராதாவும் பூக்களுக்குள் ஆடையின்றி படுத்திருப்பது போன்றதொரு காட்சி, கடல் படத்திலும் வேண்டுமென்று கருதிய மணிரத்னம் இந்த முத்தக் காட்சியை வைத்ததாகவும் கூறுகிறார்கள்.