Press enter to see results or esc to cancel.

கர்நாடகாவில் லிங்கா கிளைமாக்ஸ்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபு, ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், ஜெகபதிபாபு, தேவ் கில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அங்கு படமாக்கப் போகிறார்களாம். ஆகஸ்ட் 18-ந் தேதி இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி ‘லிங்கா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது படக்குழு. இப்படத்தை ராக்லைன் வெங்கேடஷ் தயாரிக்கிறார்.