கவிஞர் வைரமுத்துவிடம் நலம் விசாரித்த ரஜினி
ரஜினியும், கவிஞர் வைரமுத்துவும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும்
தெரியும். ரஜினியின் பல படங்களுக்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு
திரும்பிய வைரமுத்துவை ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து நலம்
விசாரித்தார்.
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கோவையில் பொதுக்கூட்டம், பேரணி என்று விழா நடத்திய வைரமுத்து, அதன்பின் சிலநாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஏற்கெனவே முதுகுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட காரணத்தினால் மேலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆகையால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பிய வைரமுத்துவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் பூரண குரணமடைய இறைவனை தான் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
ஏற்கெனவே, உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ரஜினியை வைரமுத்து நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...