Press enter to see results or esc to cancel.

'ஒன்பதுல குரு' படத்தில் குத்தாட்டம் போடும் முன்னணி கதாநாயகி

கொலிவுட்டில் வினய், லட்சுமி ராய், பிரேம்ஜி, சத்யன், அர்விந்த் ஆகாஷ், சாம்ஸ், ரூபாஸ்ரீ, சோனா, கீதா, கார்த்திகா செட்டி ஆகியோர் நடிக்கும் படம் 'ஒன்பதுல குரு'.

கொமெடி பொழுதுபோக்கு சித்திரத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கிய வேடம் தந்து நடிக்க வைக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வகுமார்.

இந்தியில் சஞ்சய் தத் நடிக்கும் படத்தை இயக்கும் ரவிகுமார், சம்பளம் கேட்காமல் 'ஒன்பதுல குரு' படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

5 கதாநாயகன்கள், 5 கதாநாயகிகள் உள்ள இந்தப்படத்துக்காக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்துகிறோம்.

கொமெடி எண்டர்டெயினர் படத்துக்காக 'வா மச்சி வா' இளமை துள்ளும் பாடலை இளம் இசையமைப்பாளர் 'கே' கொடுத்துள்ளார்.

கேரளாவில் வினய்- லட்சுமி ராய் ஜோடி நடிக்கும் ரொமாண்டிக் பாடலை படமாக்குகிறோம்.

படத்தில் 'ஐட்டம் ஸாங்' அழகியாக முன்னணி கதாநாயகி ஒருவர் ஆட போகிறார் என்று 'ஒன்பதுல குரு' பட இயக்குனர் செல்வகுமார் கூறியுள்ளார்.