Press enter to see results or esc to cancel.

டெல்லி மாணவியாக நடிக்க ஆசைப்படும் லட்சுமி ராய், பியா

டெல்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவியாக நடிக்க தயார் என்று நடிகைகள் லட்சுமிராய், பியா ஆகியோர் கூறியுள்ளனர்.

டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் சேர்ந்து கற்பழித்தார்கள்.

அம்மாணவி டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த போது மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை படமாக்கும் முயற்சியில் பாலிவுட் மற்றும் கொலிவுட் இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நடிகை லட்சுமி ராய் கூறுகையில், பரபரப்பான இந்த சம்பவத்தை படமாக்கினால், அதில் டெல்லி மாணவியாக நடிக்க தயார் என்றார்.

இப்படி ஒரு படம் தயாரானால், அது சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அதற்காகவே, அந்த மாணவியாக நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.

நடிகை பியா கூறுகையில், இந்த வேடத்தில் நடிக்க நான் தயார்.

சம்பளம் பற்றிக்கூட கவலையில்லை. இந்த வேடத்தில் நடித்தால் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமாகிடுவேன் என்றார்.



Welcom MP3 Songs, Welcom Videos Songs