Press enter to see results or esc to cancel.

கொமெடி நாயகியாக நயன்தாரா

http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/555317_449299121803457_2108054803_n.jpgசுந்தர பாண்டியன் பட இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் 'இது கதிர்வேலனின் காதல்' படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கிறார் நயன்தாரா.

இப்படத்தில் கொமெடி கலந்த நாயகி கதாப்பாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கொலிவுட் வட்டாரம் கூறுகிறது.

ஓகே.ஓகே படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின், உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவுடன் இணைந்து 'இது கதிர்வேலனின் காதல்' படத்தில் வித்தியாசமான நாயகனாக நடிக்கிறார்.

நயன்தாராவுக்கு கலகலப்பான நாயகி வேடத்தை இயக்குனர் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.

படத்துக்காக சந்தானம்- புரோட்டா சூரி கொமெடி கூட்டணி அமைத்துள்ளார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஆரம்பக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.