Press enter to see results or esc to cancel.

ஒருநாள் முன்னதாக வருகிறது அலெக்ஸ் பாண்டியன்

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் ஒருநாள் முன்னதாகவே வெளியாகிறது.

சுராஜின் இயக்கத்தில் கார்த்தி- அனுஷ்காவின் நடிப்பில் உருவாகியுள்ளது அலெக்ஸ் பாண்டியன்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக இப்படத்தில் உள்ள பேட் பாய்ஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் பொங்கல் விருந்தாக வருகிற 12ஆம் திகதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது ஒருநாள் முன்னதாகவே படத்தை வெளியிடுகின்றனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இப்படத்தை ஒருநாள் முன்னதாகவே வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.