Press enter to see results or esc to cancel.

பாலாவிற்காக காத்திருக்கும் விக்ரம், விஷால்


விக்ரம், விஷால் இருவருமே பாலாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமை சேது படத்தின் மூலமாக சினிமாவில் தூக்கிவிட்டவர் இயக்குனர் பாலா.

பின்னர் பிதாமகன் படத்திலும் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்தார். இதே போல் தான் விஷாலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த இரு நடிகர்களும் தற்போது மீண்டும் பாலாவின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார்களாம்.

இந்த விடயத்தை நேரடியாகவே இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலாவிடம் கூறியுள்ளனர்.

இதற்கிடையே லிங்குசாமி, தங்களது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படமொன்றை இயக்கித்தரும் படி பாலாவிடம் கேட்டாராம்.

நேரம் கூடி வந்தால் பாலா இயக்கத்தில் லிங்குசாமி தயாரிக்க விக்ரம், விஷால் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது.