Press enter to see results or esc to cancel.

நடன இயக்குனரை நோகடித்த சிவா

நடன இயக்குனர் சொல்லிக் கொடுத்தபடி ஆடாமல், தன்னுடைய இஷ்டத்துக்கு ஆடி அவரை நோகடித்தாராம் சிவா.

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில், சிவாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சொன்னா புரியாது.

இப்படம் குறித்து சிவா கூறுகையில், கல்யாணத்துக்கு பிறகு ஒரு ஆணின் வாழ்க்கை எப்படி மாறிவிடுகிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு பாடல் வருகிறது.

இந்த பாடல் படப்பிடிப்பின் போது தான் எனது திருமணம் நடந்தது. இதில் என்னை எப்படியாவது நடனம் ஆட வைத்துவிட வேண்டும் என்று நடன இயக்குனர் முடிவு செய்தார்.

ஒவ்வொரு பாடலின் போதும் அவர் ஒன்றுக்கு பல முறை எனக்கு கடுமையாக பயிற்சி அளிப்பார்.

ஆனால் காட்சியின்போது என் இஷ்டத்துக்குத்தான் ஆடினேன். இதற்குமேல் என்னை ஆட வைக்க முடியாது என்று நொந்துபோனவர், அவர் ஆடுவதே சரியாகத்தான் இருக்கிறது. எல்லாம் ஓகே என்று கூறிவிடுவார். கதாநாயகி வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் சென்னை சத்யம் சினிமாஸில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, வேந்தர் மூவிஸ் மதன், சசிகாந்த், இயக்குனர்கள் சுசீந்திரன், புஷ்கர்-காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.