Press enter to see results or esc to cancel.

கமர்ஷியல் படங்களை உதறி தள்ளிய நாயகிகள்

கமர்ஷியல் படங்களை குறைத்து கொண்டு நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தென்னிந்திய நடிகைகள் தெரிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

தென்னிந்திய நடிகைகள் கமர்ஷியல் படங்களையே தெரிவு செய்து நடிப்பது வழக்கம். அந்த பழக்கம் தற்போது மாறி வருகிறது.

அனுஷ்கா, த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தெரிவு செய்யத் தொடங்கி உள்ளனர்.

அருந்ததி படத்தில் நடித்த அனுஷ்கா அதைத் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை தெரிவு செய்து வந்தார்.

அப்படங்கள் முடிந்ததையடுத்து ராணி ருத்ரம்மா தேவி என்ற படத்தில் நடிக்கிறார்.

பயர், வாட்டர் படங்களை இயக்கிய தீபா மேத்தா மிட்நைட் சில்ரன் என்ற படத்தை இயக்கினார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இப்படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதுதவிர கன்னடம், தமிழில் உருவாகும சந்திரா மற்றும் தெலுங்கில் உருவாகும் பவித்ரா படங்களில் நடிக்கிறார்.

கதாநாயகியை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜு தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அடுத்து திவ்யாவும் கன்னடத்தில் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, சினிமா தயாரிப்பு இதுவரை தப்பிக்கும் கதை அம்சமுள்ள களங்களில் உருவாக்கப்பட்டு வந்தது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதுபோன்ற படங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதன் வெற்றியால் இதுபோன்ற படங்களை வரவேற்கும் டிரெண்டுட் உருவாகி இருக்கிறது என்றார்.