Press enter to see results or esc to cancel.

பொங்கல் சிறப்பு கொண்டாட்டம்: அலெக்ஸ் பாண்டியனுக்கு 5 காட்சிகள் அனுமதி

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் 5 காட்சிகளாக திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு திரையரங்க சங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜனவரி 17, 18 ஆகிய திகதிகளில் வழக்கமான 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி சேர்த்து 5 காட்சிகளாக நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனவரி 14, 15, 16, 19 மற்றும் 20 ஆகிய திகதிகள் ஏற்கெனவே அரசு விடுமுறை என்பதால் 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொங்கள் தின கொண்டாட்டமாக கார்த்தி, அனுஷ்கா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் வெளியாகிறது.

இன்று சந்தானம், பவர் ஸ்டார் கூட்டணியில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

APA Times Your Times

இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...