சியானை மிரள வைத்த இஷா ஷெர்வானி
டேவிட் படத்தில் வாய்பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் இஷா ஷெர்வானி.
சியான் விக்ரம் - ஜீவா நடிப்பில் தமிழ், இந்தியில் தயாராகியுள்ள படம் டேவிட்.
இப்படத்தில், வாய்பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் இஷா ஷெர்வானி.
இவருக்கும் விக்ரமுக்குமிடையே நிகழும் காதல் காட்சிகள், மிக வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.
நான் இது வரை நடித்த படங்களில் இருந்து இந்த படத்தில் வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன் என்கிறார் விக்ரம்.
மேலும், இப்படத்துக்காக ஜிம் சென்று உடல் கட்டையும் சரி செய்தேன். தினமும் நான் ஜிம் செல்லும் போதெல்லாம் இஷா ஷெர்வானியும் ஜிம்முக்கு வருவார்.
அப்போது, தன் காலை கழுத்தில் தொங்க போடுவது, உடம்பை வில்லாக வளைப்பது என, பல சாகசங்கள் செய்து என்னை மிரள வைத்துவிட்டார் என்றும் இஷாவின் பெருமைகளை சொல்கிறார் விக்ரம்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...