பிந்து மாதவி மீது மோசடிப் புகார்
நடிகை பிந்து மாதவி மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர், தங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளனர்.
தமிழில் நடிப்பதற்கு முன்புவரை தெலுங்கில்தான் நடித்து வந்தார் பிந்து மாதவி.
அங்கு பெரிய நாயகர்களுடன் டூயட் பாடும் வாய்ப்புகள் அமையவில்லை என்றபோதும் சில சின்ன பட்ஜெட் படாதிபதிகள் அவ்வப்போது அவருக்கு பட வாய்ப்பு கொடுத்து ஆதரித்து வந்தனர்.
அப்படி நடித்த வந்தநேரம்தான் தமிழில் கழுகு படம் வெற்றி பெற்றதால், அடுத்தபடியாக தெலுங்கு படங்களை குறைத்து விட்டு கொலிவுட்டில் முழுவீச்சில் இறங்கினார் பிந்துமாதவி.
இங்கு வந்தவேகத்தில், திரைக்குப்பின்னால் சீக்ரெட்டான முயற்சிகளை முடுக்கி விட்டு, படவாய்ப்புகளையும் துரிதமாக பெருக்கி விட்டார்.
தற்போது இரண்டாம் தட்டு நடிகர்களுடன் நடிக்கும் அரை டஜன் படங்கள் பிந்து மாதவியின் கையில் எகிறி குதித்துள்ளன.
இந்த நேரத்தில் ஏற்கனவே தெலுங்கில் நடிப்பதற்காக இரண்டு படாதிபதிகளிடம் முன்பணம் வாங்கியிருந்த பிந்துமாதவி, அவர்களுக்கு திகதிகள் தராமல் இழுத்தடிப்பதோடு, வாங்கிய முன்பணத்தையும் தராமல் இழுத்தடிக்கிறாராம்.
இதனால் தங்களை நம்ப வைத்து மோசடி செய்து விட்டதாக சம்பந்தப்பட்ட படாதிபதிகள் பிந்து மாதவி மீது ஆந்திரா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்களாம்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...