பெண் குழந்தைக்கு தந்தையானார் கார்த்தி.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்த்தி.
கொலிவுட்டின் மார்கண்டேயனான சிவகுமாரின் 2வது மகன் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கடந்த 2011ஆம் ஜீலை மாதம் 3ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரஞ்சனி இன்று மாலை 3 மணி அளவில் அப்பலோ மருத்துவமனையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தாயும்- சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று அலெக்ஸ் பாண்டியன் வெளியான நிலையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பிரியாணி படத்தில் கார்த்தி பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்செல்ல
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...