ஆதிபகவனில் 5 வேடங்களில் நடித்த ஜெயம் ரவி
அமீரின் ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவி, 5 வேடங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின், இயக்குனர் அமீரின் ஆதிபகவன் மெதுமெதுவாக முடிந்திருக்கிறது.
தான் இயக்கும் படங்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காகவே நீண்ட நாட்கள் படப்பணிகளை இழுப்பாராம் அமீர்.
இந்நிலையில் ஆதிபகவனில் மாஃபியா கும்பலைப்பற்றி எடுத்துள்ளார் அமீர்.
பாங்காக்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், முழு நீள ஆக்ஷன் படமாகும்.
இப்படத்தில் அரவாணி வேடத்தில் ரவி நடித்திருக்கிறார் என்ற தகவல் மட்டும் தான் வெளியாகியிருந்தது.
தற்போது இது தவிர, இன்னும் 4 வேடங்களில் அதாவது மொத்தம் 5 வேடங்களில் ரவி நடித்திருக்கிறாராம்.
இதற்கிடையே மாஃபியா கும்பலைப்பற்றி விஷாலின் சமர் படமும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...