எழுத்தாளனாக கருணாஸ் நடிக்கும் "சந்தமாமா"

கதாநாயகியாக ஸ்வேதாபாசுவும், மற்றொரு நாயகனாக ஹரீஸ்கல்யாணும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஆர். சுந்தர்ராஜன், இளவரசு, சுஜாதா, மோகன்ராம், மாறன், கொட்டாச்சி, ரகசியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ராதாகிருஷ்ணன்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், சாதாரண சந்தானகிருஷ்ணன் தன்னை சந்தமாமா என்று பெயர் மாற்றிக் கொண்டு எழுத்தாளனாக ஆசைப்படுகிறான்.
அதற்காக அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் சாதகமாகவும் பாதகமாகவும் எப்படி மாறுகிறது.
அதற்குப் பின்பு அவன் சந்தமாமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு சாதாரண சந்தான கிருஷ்ணனாக ஆசைப்படுகிறான்.
அதற்காக அவன் சந்திக்கிற நிகழ்வுகளே "சந்தமாமா" என்றும் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னை, கேரளா, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
வசனம் – ராம்நாத்
பாடல்கள் – கவியரசு வைரமுத்து, கன்னியப்பன்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு – ஆனந்தகுட்டன்
கலை – மணிசுசித்ரா
நடனம் – ஸ்ரீதர்
தயாரிப்பு நிர்வாகம் – ரகு
தயாரிப்பு மேற்பார்வை – உன்னிகிருஷ்ணன்
தயாரிப்பு – முரளி
கதை, திரைக்கதை, இயக்கம் – ராதாகிருஷ்ணன்
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...