ஒரு வழியாக தளபதி படத்திற்கு தலைப்பிட்ட விஜய்
இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'தலைவா' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படத்திற்கு ஏற்கனவே தலைவன் மற்றும் தங்கன் மகன் போன்ற தலைப்புக்களை வைத்த போது சர்ச்சைகள் ஏற்படவே அத்தலைப்புக்களை நிராகரித்தார் இளைய தளபதி.
இந்நிலையில் சினிமா ஆய்வாளாரான ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டரில் கருத்து வெளிடுகையில், விஜய்- விஜய் படத்திற்கு 'தலைவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்பெயர் மாஸாக இருப்பதை உணரமுடிகிறது என விஜயின் நாயகி அமலா பால் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமலா பால் தனது ட்விட்டரில், விஜய்- விஜய் படத்திற்கு 'தலைவா' என பெயரிடப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வமானது என தெரிவித்துள்ளார்.
விரைவில் இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...