பெப்ரவரி 2ல் விஸ்வரூபம்(அறிக்கை இணைப்பு)
திரையரங்க உரிமையாளர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு பின்னர் வரும் 25ம் திகதி விஸ்வரூபம் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படுகிறது என கமல் அறிவித்தார்.
ஆனால் டி.டி.எச்.சில் ஒளிபரப்பும் திகதியை அப்போது கமல் குறிப்பிடவில்லை.
இப்படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் பிப்ரவரி 2ம் திகதி ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப கமல் முடிவு செய்துள்ளார்.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் அறிவித்தார்.
ஆனால், எந்தெந்த டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்டும் என தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை.
ஏற்கனவே கமல், ஏர்டேல், டாடா ஸ்கை, டிஷ்டிவி, சன், ரிலையன்ஸ், வீடியோகான் ஆகிய டி.டி.எச்களில் இப்படம் ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...