10 மணிநேரம் தண்ணீரிலேயே கிடந்த நடிகை
பேராண்மை மற்றும் நீர்பறவை படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்த வர்ஷா, தற்போது அமைதிப்படை பாகம் 2ல் நடித்துக்கொண்டிருக்கிறார்.
பொதுவாக ஒரு நடிகை வளர்கிற நேரத்தில் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை விரும்புவதில்லை.
அப்படி நடித்தால் எப்போதும் அதுபோன்ற நடிகர்களுடன் தான் நடிக்க இயக்குனர்கள் அழைப்பார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு வரும்.
ஆனால் வர்ஷா இதை ஒரு வரப்பிரசாதமாகவே எடுத்துக் கொண்டாராம்.
அதாவது, சினிமாவில் அனுபவசாலிகளுடன் சேர்ந்து நடிக்கும்போது இந்த துறையை பற்றிக் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
அவர்கள் தன் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
நான் நினைத்த மாதிரியே சத்யராஜ் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார் என்கிறார்.
இப்படத்திற்காக பத்துமணி நேரம் எடுக்கப்பட்ட மழைக்காட்சியில் நடித்த வர்ஷா, தொடர்ந்து மழையில் கிடந்ததால் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டதாம்.
ஆனால் கடைசியில் சத்யராஜ், மணிவண்ணன் இருவரும் பாராட்டிய போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்றார் வர்ஷா.
இந்திக்கார பெண்ணாக இருந்தாலும் வர்ஷா பேசும் தமிழில் தூத்துக்குடி வாடை தெரிகிறது.
ஏனென்றால் அப்பா கப்பல் அதிகாரி என்பதால் கடந்த இருபது வருடமாக குடும்பத்தோடு தூத்துக்குடியில் தங்கியிருக்கிறார் வர்ஷா.
Welcom MP3 Songs, Welcom Videos Songs
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...