Press enter to see results or esc to cancel.

விஷால் படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ்

‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் புதிய படம் ‘பூஜை’. இப்படத்தை ஏற்கெனவே விஷாலை வைத்து ‘தாமிரபரணி’ படத்தை எடுத்த இயக்குனர் ஹரி இயக்குகிறார். இதில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
 

யுவன் இசையமைக்கும் இப்படத்தை விஷால் தன்னுடைய சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வரும் வேளையில், இப்படத்தின் தியேட்டர் உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், முகேஷ் திவாரி, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், சூரி, மனோபாலா, கௌசல்யா, சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்படத்தில் கோயம்பேடு மார்க்கெட் பின்னணியில் உருவாகும் ஒரு பாடலுக்கு ஆண்ட்ரியா நடனம் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.