Press enter to see results or esc to cancel.

இளமை ஊஞ்சலாடுகிறது ரீமேக்கில் சிம்பு, தனுஷ்?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் ரீமேக் ஆகிறது.

தமிழில் 1978-ம் ஆண்டில் ரிலீசான இப்படத்தில் நாயகிகளாக ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா நடித்தனர். ஸ்ரீதர் இயக்க இளையராஜா இசையமைத்தார்.

ரூ.68 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இடம் பெற்ற கிண்ணத்தில் தேன் வடித்து, என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, தண்ணி கருத்திருக்கு போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

அப்பொழுதே வெற்றிகரமாக ஓடிய இப்படத்தின் தற்போதைய ரீமேக்கில் தனுஷ், சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

ரஜினி வேடத்துக்கு தனுசும், கமல் வேடத்திற்கு சிம்புவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீபிரியா வேடத்தில் ஸ்ருதிஹாசனிடம் பேசுகிறார்கள்.

தனுசும், சிம்புவும் தற்போது நெருங்கிய நண்பர்களாகி உள்ளனர். எனவே இருவரும் இப்படத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது.

இருவரும் கைவசம் உள்ள படங்களை முடித்ததும், இளமை ஊஞ்சலாடுகிறது பட ரீமேக் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Welcom MP3 Songs, Welcom Videos Songs