Press enter to see results or esc to cancel.

தெலுங்கு பட உலகை கலக்கும் நித்யா மேனனின் புதிய போஸ்டர்

வெப்பம், 180 உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யா மேனன், தற்போது ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, குந்தே ஜாரி கல்லத்தயிந்தே என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் நாயகன் நித்யாவை விட மிகவும் உயரம்.

இதனால் பாடல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்கும் போது, உயரத்தை சமாளிப்பதற்காக சிறிய ஸ்டூல் போட்டு, அதில் நித்யாவை நிற்க வைத்து காட்சிகளை படமாக்கினர்.

பொதுவாக இதுபோன்ற காட்சிகள் எடுக்கும் போது, அது குறித்த தகவலை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது படக் குழுவினருக்கு வழக்கம்.

ஆனால் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்ட போது, அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

அதில், நாயகனுடன் நித்யா மேனன் இருக்கும் காட்சிகளில், அவர் ஸ்டூல் மீது ஏறி நிற்பது போன்ற காட்சிகளை போஸ்டர்களில் வெளியிட்டனர்.

ஏன் இந்த கொலைவெறி என இயக்குனரிடம் கேட்டால், கொலையும் இல்லை, வெறியும் இல்லை. எல்லாம் ஒரு விளம்பரம் தான் என கூறுகிறாராம்.

Welcom MP3 Songs, Welcom Videos Songs