Press enter to see results or esc to cancel.

சரித்திர படங்களால் சந்தோஷம்! அனுஷ்கா உற்சாகம்!!

    தொடர்ந்து சரித்திர பட வாய்ப்புகள் கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது, என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

   அருந்ததி படம் அனுஷ்காவை ன்னணி நடிகையாக்கியது. அப்படம் சரித்திர கதையை பின்னணியாக கொண்டது. 

   தற்போது தமிழ், தெலுங்கில் பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ராணி ருத்ரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
  
    தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் தயாராகிறது.


    புதிய சரித்திர பட வாய்ப்பு குறித்து அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில், அருந்ததி படம் எனக்கு பெரிய இடத்தை கொடுத்தது.

    நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக அது இருந்தது. அப்படத்துக்கு பிறகு சரித்திர கதைகளில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

    அதில், ராணி ருத்ரமாதேவி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.

    ராணி ருத்ரமா தேவியை பற்றிய வரலாற்று கதையே இப்படம்.

    சிறுவயதில் ராணி ருத்ரமாதேவியை பற்றி சரித்திர புத்தகத்தில் படித்துள்ளேன்.

    அவர் கேரக்டரில் நடிக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியில் குதிக்கிறேன்.

    இது எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் ஆகும்.

   அருந்ததிக்கு பிறகு என்னால் சரித்திரக் கதைகளில் நடிக்க முடியும் என்று இயக்குனர்கள் நம்புகின்றனர்.

  அந்த நம்பிக்கையே இந்த படவாய்ப்பை பெற்று தந்துள்ளது, என்று கூறியுள்ளார்.

Welcom MP3 Songs, Welcom Videos Songs