கோஹ்லியுடன் காதலா? சஞ்சனா விளக்கம்
கொலிவுட்டில் காதல் செய்வீர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா.
இதற்கு பின்பு இவருக்கு, தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் கன்னடம், தெலுங்கு படங்களுக்கு சென்று விட்டார்.
இவர் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் பிரபல கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியுடன் சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் றொயல் சேலஞ்சர் அணிக்காக, கோஹ்லி விளையாட வந்தபோது, அவருக்கும், சஞ்சனாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
இதையடுத்து, இருவரும், பல இடங்களில் ஜோடி போட்டு சுற்றினாலும், காதல் இல்லை என்று இருவருமே திட்டவட்டமாக மறுத்தனர்.
இது குறித்து சஞ்சனா கூறுகையில், கோஹ்லியுடன் பெங்களூரில் பல இடங்களில் சுற்றியது உண்மை தான். அதற்காக, நாங்கள் காதலிப்பதாக அர்த்தம் இல்லை.
நாங்கள் இருவரும் நண்பர்கள் அவ்வளவு தான் என்றும் எங்களுக்கு இடையே காதல் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...