Press enter to see results or esc to cancel.

இடைவெளி ஏன்? நகுல் விளக்கம்



சென்னை : ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’ படங்களில் நடித்துள்ள நகுல் கூறியதாவது: ‘மாசிலாமணி’க்கு பிறகு, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’ படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டேன். இரண்டுமே முக்கியமான படங்கள்.

 ‘வல்லினம்’ படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரனாக நடிக்கிறேன். ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறேன்.

ஒன்று கிக் பாக்சர். இரண்டு படத்துக்குமே என்னை தயார் படுத்த வேண்டியது இருந்தது.

 இரண்டு விளையாட்டையும் முறைப்படி கற்றுக் கொள்ள அவகாசம் எடுத்துக் கொண்டேன். இந்த இடைவெளியை பெரிதாக எடுத்துக் கொண்டார்கள்.

 இப்போது இரண்டு படங்களுமே வெளிவரும் நிலையில் இருக்கிறது. ‘அமளி துமளி’ ரொமான்டிக் காமெடிப் படம். ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

APA Times Your Times

இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...