Press enter to see results or esc to cancel.

விஜயால் குழப்பமடைந்த அமலா பால்

தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அமலாபாலின் கதாப்பாத்திரம் டம்மியானது.

அதனால் தன்னிடம் கவலை தெரிவித்த அமலா பாலுவிடம், கண்டிப்பாக அடுத்து ஒரு படத்தில் முக்கிய நாயகி வேடம் தருகிறேன் என்று அவரிடம் உறுதி அளித்திருந்தார் இயக்குனர் விஜய்.

அதேபோல், தாண்டவம் படத்தையடுத்து தான் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் தலைவா படத்தில் அமலாபாலை நாயகியாக அறிவித்தார்.

இதனால் உற்சாகத்தில் பறந்துகொண்டிருந்தார் அமலாபால்.

ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பில் அமலாவை மட்டுமே விஜய்க்கு ஜோடியாக வைத்து படமாக்கிவந்த இயக்குனர் விஜய், இப்போது திடுதிப்பென்று படத்தில் இனனொரு நாயகி வேடமும் இருப்பதாக சொல்லி அமலாபாலுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.

அந்த இனனொருநாயகி வேடத்தில் நடிக்கும் நடிகை மும்பையைச்சேர்ந்த பிரபல நடிகை என்றும் கூறியுள்ளார் விஜய்.

அதனால் ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு தனது கதாப்பாத்திரத்தை டம்மியாக்கினார்.

இந்த முறையும் அப்படியாகிவிடுமோ என்று கடுமையாக குழம்பிப்போயிருக்கிறார் அமலா.