Press enter to see results or esc to cancel.

முத்தக்காட்சி வைத்தால் அஜித், விஜயுடன் நடிக்க மாட்டேன்: லட்சுமி மேனன்

‘சுந்தர பாண்டியன்’, ‘கும்கி’ ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன்.

இரு படங்களுமே பெரியளவில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ரொம்பவும் புத்துணர்ச்சி பெற்றுள்ளார்.

தற்போது மீண்டும் சசிகுமாருடன் ‘குட்டிப்புலி’, விமலுடன் ‘மஞ்சப்பை’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முந்தைய படங்களைப் போன்று இந்த படத்தில் கிராமத்துப் பெண்ணாகத்தான் நடிக்கிறாராம்.

இது குறித்து லட்சுமிமேனன் கூறுகையில், சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக வேண்டுமென்றுதான் நடிக்க வந்தேன். வந்த வேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. அதனால் நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டேன்.

அதேநேரத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

ஆனால் அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் நடிக்க வேண்டுமென்றால் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும்.

கூடவே, முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி வைப்பார்கள். எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால்தான் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தள்ளி வைத்துவிட்டேன்.

எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் அமையும் படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் இருக்கிறேன் என்றார்.

கொஞ்ச காலம் சினிமாவில் இருந்தாலும் பேர் சொல்லும் நடிகையாக இருந்துவிட்டு போகவேண்டும் என்பதே என் விருப்பம் எனவும் கூறியுள்ளார்.


Welcom MP3 Songs, Welcom Videos Songs