Press enter to see results or esc to cancel.

சாதனைகள் புரியும் தமிழ் ஈழ கலைஞன் சாந்தனின் படைப்புகள் வீடியோ இணைப்பு)

புலம்பெயர் நாட்டில் திறமைகளோடு வளர்ந்து வரும் தமிழ் ஈழக் கலைஞர்களில் ஒருவரான சாந்தன், சிறந்த ஒளிப்பதிவாளராக தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் அவருடைய ஒளிப்பதிவு துறையில் மூன்று வருடங்களுக்கும் மேலாக சிறந்த, தரமான படைப்புக்களை மக்களுக்கு தந்த வண்ணம் தனது கலைப் பயணத்தைத் தொடர்கின்றார்.

சிறு வயதிலிருந்தே நிழற்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு தனது தந்தையிடம் இருந்து பல நுட்பங்களை கற்றுக் கொண்டார்.

12 வருடத்திற்கு மேலாக நிழற் படம் எடுப்பதிலும் தேர்ச்சி பெற்றவராக தன்னை வளர்த்துக் கொண்டார்.

பிரித்தானியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களால் உருவாக்கப்படும் பல பாடல்களுக்கும், குறும்படங்களுக்கும்,விளம்பரங்களுக்கும் தனது தனித்திறமையால் தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளை கண்களுக்கு விருந்தாகி இருக்கின்றார். இவர் "Eternal Icon"எனும் கலை நிறுவனத்தையும் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்த படியாக பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டு வரும் "ஆரண்யம்" என்னும் முழு நீளத்திரைப்படத்திற்கும் பிரதான ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகின்றார்.

இவரது வெற்றிப்பாதையில் 2013ம் ஆண்டு தென் இந்தியத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தனது கலைப்பயணத்தில் மேலுமொரு படி உயர்கின்றார்.

ஈழம் தந்த நல்ல கலைஞராக பற்பல தரமான படைப்புக்களைத்த ரவேண்டும் என இந்த இனிய புத்தாண்டில் வாழ்த்துகின்றோம்.

பிரித்தானியாவில் ஈழத்து கலைஞர்களாலும் சாந்தனின் சிறந்த ஒளிப்பதிவிலும் வெளிவந்த பாடல் காட்சிகளில் சில,

Tags