Press enter to see results or esc to cancel.

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 'அலெக்ஸ் பாண்டியன்' படம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP9rbwLHi9GaANNtY9uJdk0T9NdKayhpSs7oaOEBItJ4A1XiyAHlGN78SFZOWb6kUC8EBpD1HVnLsvhO2YNvHOAxCbMTObRjnwVUTcj9_8gISLOcEjSp5oNzWtWiqPJz0SN6zFrnTKotzp/s1600/Alex+Pandian+Movie+Latest+Stills+(1).jpgஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் அலெக்ஸ் பாண்டியன்.

சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஊடகத்தினருக்காக இப்படம் திரையிடப்பட்டது.

முதல்வர் விசுவின் மகள் அனுஷ்காவை கார்த்தி கடத்த, அவரை வில்லன் கும்பல் ஏன் விடாமல் துரத்துகிறது என்பதை ஆக்சன் மாஸ் மசாலா ஃபார்முலாவில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுராஜ்.

மிரட்டலான ஆக்சன் காட்சிகளில் கார்த்தி சலிக்காமல் நடித்துள்ளார். முதல் பாதியில் சந்தானத்தின் குடும்பத்தோடும், இரண்டாம் பாதியில் காட்டில் மனோபாலாவுடனும் கார்த்தி இணைந்து கொமெடி அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.

பொலி காளை கார்த்தியிடமிருந்து சந்தானம் தன் தங்கைகளை காப்பாற்ற போராடி, காட்சிகளை கலகலப்பாக்குகிறார்.

இடைவேளைக்கு பின்பு ஆக்சன் ரூட்டில் படம் அதிரடியாக பறக்கிறது. காட்டில் கார்த்தியிடம் மனோபாலா சிக்கி தவித்து சிரிப்பு காட்டுகிறார்.

மாஸ் ஹீரோவுக்கு உரிய அத்தனை ஆக்சன் ரகளையை காட்டி கார்த்தி கம்பீரம் காட்டுகிறார். கார்த்திக்கு பொருத்தமான, 'ஓங்கு தாங்கு' உடல் அழகியாக அனுஷ்கா வருகிறார்.

சந்தானத்தின் தங்கைகளாக வரும் நிகிதா, சனுஷா, அகன்ஷா மூன்று நாயகிகளும் கார்த்தியோடு இணைந்து கிளுகிளுக்க வைக்கிறார்கள்.

பருத்திவீரன் சரவணனுக்கு 'சித்தப்பு' வேடம் கொடுத்துள்ளார்கள்.

வில்லன்களோடு மல்லுக்கட்டி, தடை செய்யப்பட மருந்தை இந்தியாவில் விற்க முடியாமல் கார்த்தி எப்படி தடுக்கிறார் என்பதை தெலுங்கு மசாலா ஆக்சன் ஸ்டைலில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுராஜ்.