பக்குவமான பெண் ஐஸ்வர்யா அர்ஜுன்: விஷால்
ஐஸ்வர்யா அர்ஜுன், எதற்கும் பதட்டப்படாமல் நல்ல பக்குவமாக நடந்து கொண்டு நடித்து கொடுக்கிறார் என்று விஷால் கூறியுள்ளார்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் பட்டத்து யானை.
இப்படத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். சமீபத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவுடன் நடித்துவரும் அனுபவம் பற்றி நடிகர் விஷால் கூறுகையில் நல்ல புத்திசாலிப் பெண் ஐஸ்வர்யா அர்ஜுன்.
எதற்கும் பதட்டப் படாமல், நல்ல பக்குவமாக நடந்து கொண்டு, நடித்துக் கொடுத்து விடுவார். இந்த வயதில் இவருக்கு எப்படி இத்தனைப் பக்குவம் என்று நான் ஆச்சரியப் பட்டுக் கேட்டேன்.
எனக்கு அப்பா, அம்மா இருவருமே நிறைய ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்வார்கள் இக்கட்டான சமயங்களில் நானே குழப்பிக் கொண்டிருக்காமல் அம்மா அப்பாவிடம் யோசனைக் கேட்பேன்.
அதனால்தான் இவ்வளவு பக்குவம் என்று சொன்னார் என்று கூறும் விஷால், அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்கும் எவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதுவும் என் குருநாதரின் மகள் இப்படி நடந்து கொண்டதும் எனக்கு ஐஸ்வர்யாவை மிகவும் பிடித்து போனது என்று கூறியுள்ளார்.
Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...