2013-ம் வருடத்தில் எனக்கு திருமணம்: ஜி.வி.பிரகாஷ்
‘வெயில்’ படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இவரும் பின்னணிப் பாடகி சைந்தவியும் நெடுநாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் கல்யாணம் செய்துக் கொள்ளப்போவதை உறுதி செய்தபின்பும் எப்பொழுது கல்யாணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில், 2013-ம் வருடத்தில் தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2012-ம் வருடம் தனக்கு வெற்றிகரமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ‘தேசிய நெடுஞ்சாலை’, ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’, விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம், ஜெய், ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி’ ஆகிய படங்கள் 2013-ம் ஆண்டு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. பாடகி சைந்தவி ‘அந்நியன்’ படத்தில் ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இவரும், ஜி.வி.பிரகாஷும் இணைந்து வெளிவந்த பாடல்கள் பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Welcom MP3 Songs, Welcom Videos Songs
Similar to this Post
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...