மாஸ் படத்தில் 6, 7, 8 என்று கணக்கு போடும் யுவன்

அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா- நயன்தாரா நடிக்கும் ‘மாஸ்’ படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைப் பற்றி யுவன் கூறும்போது, ‘மாஸ்’ படத்தில் 6, 7, 8 சிறப்பம்சம் உள்ளது என்று கூறினார்.
இதைப்பற்றி தெளிவாக ஆராய்ந்த போது, வெங்கட் பிரபு படத்தில் யுவன் இணைவது 6-வது படம் என்பது தெரியவந்தது. இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-28’, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார்.
அதேபோல் சூர்யா நடிப்பில் யுவன் இசையமைப்பது 7-வது முறையாகும். இதற்குமுன் பூவெல்லாம் கேட்டுப்பார், நந்தா, மௌனம் பேசியதே, பேரழகன், வேல், அஞ்சான் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார்.
அதேபோல் நயன்தாரா நடிப்பில் யுவன் இசையமைப்பது 8-வது முறையாகும். கள்வனின் காதலி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஆரம்பம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...