உதயநிதி நடிக்கும் கதிர்வேலன் காதலி
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20ம் திகதி தொடங்குகிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் அறிமுகமான தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்படமே வெள்ளி விழா கண்டது.
இதனால் அவரை வைத்து படம் இயக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் உதயநிதி சுந்தரபாண்டியன் படம் கொடுத்த எஸ்.ஆர் பிரபாகரனை தெரிவு செய்தார்.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
படத்துக்கு "இது கதிர்வேலன் காதலி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20ம் திகதி தொடங்குகிறது.
சமீபத்தில்தான் நயன்தாரா - உதயநிதி பங்கேற்ற photo shoot நடந்தது.
எதிர் வரும் யூன் மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...