அஞ்சலியின் திடீர் முடிவு
கொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்சலி, தெலுங்கு படங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்.
கற்றது தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் அஞ்சலி.
இதன் பின் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டினார்.
இதனையடுத்து “சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு” என்ற படத்தில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் அதிகமான பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டுமானால், கிளாமரான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதால் அஞ்சலியும் அதற்கு தயாராகி விட்டார்.
ரவிதேஜா ஜோடியாக பலுபு என்ற படத்தில், தற்போது நடித்து வரும் அஞ்சலிக்கு மருத்துவர் வேடமாம்.
ஆனாலும் கிளாமருக்கு சற்றும் குறை வைக்காமல் பட்டையை கிளப்புவது என முடிவெடுத்துள்ளாராம். இந்த படத்துக்கு பின் தெலுங்கு ரசிகர்களின் ஆதரவும், பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கும் என நம்புகிறார் அஞ்சலி.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...